கோலாலம்பூர், மார்ச்.01-
மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோபியா ஆகியோர் தங்களின் புனித ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த புனித மாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உறவுகளை வலுப்படுத்தவும், தேவைப்படுபவர்களுக்கு உதவவும், நாட்டில் உள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
தவிர, இந்த புனித மாதத்தில் தங்களுக்குள் சர்ச்சைகள் அல்லது மோதல்கள் ஏற்படுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் வலியுறுத்தியுள்ளார்.