பிகேஆர் துணைத் தலைவராக ரபிஸி ரம்லி நிலை நிறுத்தப்பட் வேண்டும் – டத்தோஸ்ரீ அன்வார் ஆசி வழங்கினார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.01-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் ரபிஸி ரம்லி, கட்சியின் துணைத் தலைவராக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆசி வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக ரபிஸி தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில பிகேஆர் கூட்டத்தில் அன்வார் நிகழ்த்திய உரையின் காணொளியின்படி, நாட்டின் பொருளாதார அமைச்சராக இருக்கும் ரபிஸி ரம்லி, தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் அவர் தனது கடமையையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற இடம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சியின் துணைத் தலைவராக ரபிஸி தொடர்ந்து தேர்வு செய்யப்படுவது மூலம் கட்சியின் இலக்குகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS