சுங்கை பூலோ, மார்ச்.02-
சுங்கை பூலோ, கம்போங் டேசா அமான் பகுதியில் உள்ள வடிகாலில் நீர் வழக்கத்திற்கு மாறான நிறத்திற்கு மாறியதன் பின்னணியில், சாய கொள்கலன்களைச் சுத்தம் செய்யும் ஒரு தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அருகிலுள்ள ஆற்றில் வண்ண நீர் கலப்பது கண்டறியப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள ஆய்வுகளின் விளைவாக, அஃது ஒரு தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அங்கு சாயக் கொள்கலன்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அஃது அருகிலுள்ள வடிகாலில் நுழைந்ததாகவும் கண்டறியப்பட்டது. சாயம் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்க, LUA எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியக் குழுவினர் அந்த இடத்தில் ஒரு பை activated carbon’ வைத்தனர். மேலும், அங்கிருந்து தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.