பெட்டாலிங் ஜெயா, மார்ச்.02-
பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்ற 17 வயது சிறுமி தவமலர் காணாமல் போனதாகக் கூறப்படுவதை அடுத்து, காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். அவர் கடைசியாக பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 7.05 மணியளவில் செக்சன் 12, ஜாலான் 12/6 எனும் பகுதியில் காணப்பட்டார். மார்ச் 1ஆம் தேதி மாலை 5.13 மணியளவில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேடும் பணியில் காவல் துறை களமிறங்கியுள்ளது.
அந்த இளம்பெண் 159 சென்டிமீட்டர் உயரமும், 52 கிலோ எடையும், கருமையான நீண்ட முடியும் ஒல்லியான உடல்வாகும் கொண்டவர். அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.