சுங்கை பூலோ, மார்ச்.02-
கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டுவாசிகளைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஹெர்மான் கும்பலைச் சேர்ந்தவர்கள், இங்குள்ள மாவட்டத்தில் உள்ள 3 விடுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில், 22 முதல் 53 வயது வரை உள்ள எட்டு ஆண்கள், ஏழு பெண்கள் உட்பட 15 இந்தோனேசிய குடிமக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவில் உள்ள முகவர்களுக்கு அந்த வெளிநாட்டுவாசிகள் 1,800 ரிங்கிட் முதல் 2,000 வரை ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று புக்கிட் அமான் D3 பிரிவின் உதவி இயக்குநர் சோஃபியான் சந்தோங் குறிப்பிட்டார். ஹெர்மான் கும்பல் கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.