குவாந்தான், மார்ச்.02-
இன்று குவாந்தான்-கெமாமான் சாலையில் உள்ள செராதிங் பகுதியில் உள்ள ஹோட்டல் ரோயல் சூலான் சந்திப்புக்கு அருகில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் லாரியுடன் மோதி உயிரிழந்தார். நண்பகல் 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், செராதிங் பாரு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அபு ஹானிஃபா யூசோப், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 46 வயது லாரி ஓட்டுனர் காயமின்றி தப்பினார். உடற்கூறு ஆய்வுக்காக சடலம் தெங்கு அம்புவான் அஃசான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என குவாந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கொமிஷனர் வான் முகமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் வாகனத்தைச் சரியாகச் கட்டுப்படுத்தத் தவறியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.