அலோர் ஸ்டார், மார்ச்.03-
தாயாருக்கும், மகனுக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் சொந்தத் தாயை எரியூட்டி கொன்றதாக நம்பப்படும் ஒரு மாற்றுத் திறனாளியான மகன் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கெடா, அலோர் ஸ்டார், ஜாலான் தோக் கெலிங்கில் நேற்று காலை 7.40 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீக் காயங்களுக்கு ஆளாகிய 68 வயது மூதாட்டியின் உடலை மீட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள 43 வயதுடைய ஆடவர், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையை வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சித்தி நோர் சாலாவாத்தி சாஆட் தெரிவித்தார்.
முன்னதாக, தனது பாட்டியிடம் தனது தந்தை மிக ஆவேசமாக நடந்து கொண்டதாகவும், இதனைப் பார்த்த தாம், உதவிக் கோரி, அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வந்ததாகவும் 14 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.