காஜாங், மார்ச்.03-
லோரியை விட்டு கீழே இறங்கிய ஆடவரை வேண்டுமென்றே மோதித் தள்ளியதாக நம்பப்படும் வயதான தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காஜாங், பாண்டார் தெக்னோலோஜி காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு 73,65 வயதுடைய அந்த தம்பதியர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
காரின் DashBoard கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு ஆராயப்பட்டதில் , ஆடவரை மோதித் தள்ளியப் பின்னர் அந்த தம்பதியரின் கார், நிற்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றது. கேமரா பதிவின் மூலம் அந்த தம்பதியர், அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஏஎஸ்பி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.
42 வயதுடைய நபர், மோதப்பட்டதற்கான உண்மையான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.