வக்கிரச் செயல், அந்த மருத்துவர் ஜாமீனில் விடுவிப்பு

ஜார்ஜ்டவுன், மார்ச்.03

மருத்துவமனையின் தனியறையில் இளம் பெண் நோயாளியை ஆடை களையச் செய்து, வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவர், விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படும் இந்த ஆபாச சேட்டை தொடர்பில் ஓர் அரசாங்க ஊழியரான 43 வயதுடைய அந்த மருத்துவர் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

உதவி பெண் தாதியரின்றி, 20 மதிக்கத்தக்க பெண்ணை அந்த மருத்துவர் ஆடையைக் களையச் செய்த போது, மருத்துவ நடைமுறைகளில் ஒன்று என கருதி, அந்த பெண் நோயாளி அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ சுவீ சாகே தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS