டிஏபி தேர்தலில் 70 வேட்பாளர்கள் போட்டி

கோலாலம்பூர், மார்ச்.03

வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் உயர் மட்டப்பதவிகளுக்கான டிஏபி தேர்தலில் மொத்தம் 70 பேர் போட்டியிடுகின்றனர் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

டிஏபியின் 18 ஆவது தேசிய மாநாடும், அதனையொட்டிய மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலும் பற்றிய விவரங்களை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார்.

போட்டியிடவிருக்கும் 70 வேட்பாளர்களில் பெரும் பகுதியினர், தங்கள் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டிஏபியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங், தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, மூன்று உதவித் தலைவர்களான ங்கா கோர் மிங், சோவ் கோன் யியோ, மற்றும் தாம் உப்பட மத்திய செயலவைக்கு போட்டியிடவிருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

கட்சியின் நடப்பு மத்திய செயலவை உறுப்பினர்களான தான் கோக் வாய், ஃபோங் குய் லுன், எம்.குலசேகர்ன் மற்றும் ஜென்னி லசிம்பாங் ஆகியோர் போட்டியிடவில்லை என்பதையும் ஸ்டீவன் சிம் விளக்கினார்.

70 வேட்பாளர்களில் சிலர், கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகலாம் என்பதைற்கான சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.

WATCH OUR LATEST NEWS