ஈப்போ, மார்ச்.03-
பேரா, தெலுக் இந்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, நிகழ்ந்த கவனக்குறைவினால் 3 வயது சிறுமி மரணமுற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.
அந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பேரா மாநில சுகாதாரத்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சளிக்காய்ச்சல் தொடர்பில் அந்த சிறுமி, பெற்றோரோல் தெலுக் இந்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுமிக்குச் செலுத்தப்பட்ட ஊசியினால் அவர் மரணமுற்றதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதால் ஆருடம் எதனையும் கூற வேண்டாம் என்று பொது மக்களை சிவநேசன் கேட்டுக் கொண்டார்.