புகார் அடிப்படையிலேயே மலேசிய கினி நிருபர் கைது செய்யப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.03-

மலேசிய கினி நிருபர், B. நந்தக்குமாருக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட புகார் அடிப்படையிலேயே அந்த நிருபர் கடந்த வாரம், ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்தார்.

எந்தவொரு நபரும், தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காக லஞ்சப் பணம் பெற்றாலோ அல்லது கேட்டாலோ அவரை ஊழல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அதிகாரத்தை எஸ்பிஆர்எம் கொண்டுள்ளது என்று அஸாம் பாக்கி இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பாக ஏஜெண்டு ஒருவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் மலேசிய கினி நிருபர் நந்தகுமாரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்து, தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரிங்கிட் வரை லஞ்சம் கோரியதாக நந்தகுமாருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அந்த ஏஜெண்டு, எஸ்பிஆர்எமில் புகார் செய்ததைத் தொடர்ந்து நந்தகுமாரைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் சட்டங்கள் என்பது அரசு துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS