கோலாலம்பூர், மார்ச்.03-
பூமிபுத்ரா சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக ஒரு பத்து விழுக்காட்டுத் தொகையை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கும்படி அரசாங்கத்தை டிஏபி தலைவர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
உதாரணத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பூமிபுத்ரா சமூகத்திற்கு மொத்தம் 11.4 பில்லியன் ரிங்கிட் அல்லது 1,140 கோடி ரிங்கி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேவேளையிலா பூமிபுத்ரா அல்லாத சமூகத்திற்கு 345 மில்லியன் ரிங்கிட் அல்லது 34 கோடியே 50 லட்சம் ரிங்கிட் என வெறும் 3 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டது.
பூமிபுத்ரா சமூகத்திற்கு என்ன தொகை ஒதுக்கப்பட்டாலும் அதனைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் அதே வேளையில் பூமிபுத்ரா அல்லாத சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 விழுக்காட்டுத் தொகை 10 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று நடப்பு அரசாங்கத்தை லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
உதாரணத்திற்கு பூமிபுத்ராக்களுக்கு 1,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டால் அந்த தொகையில் 10 விழுக்காடு என்ற அடிப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு 120 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று லிம் குவான் எங் வலியுறுத்தினார்.