ஷா ஆலம் விளையாட்டரங்கை இடித்துத் தள்ளும் பணி 78 விழுக்காடு நிறைவடைந்தது

ஷா ஆலாம், மார்ச்.03-

ஷா ஆலாம் விளையாட்டரங்கை இடித்துத் தள்ளும் பணி இதுவரை 78 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முன்னதாகவே இப்பணிகள் நிறைவடைந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அரங்கை இடிக்கும் பணிகள் அட்டவணையின்படி சீராக நடைபெற்று வருவதாகவும் புதிய மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இவ்வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

அரங்க இடிப்புப் பணிகளின் முன்னேற்றம், நிர்ணயித்த இலக்கைவிட முன்னதாகவே நிறைவடையும். தற்போது 78 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS