மலாக்கா, மார்ச்.03-
பரவசமூட்டும் பானம் என்ற பெயரில் பானத்தில் போதைப்பொருளைக் கலந்து, கேளிக்கை மையங்களுக்கு விநியோகித்து வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மலாக்கா போலீசார் முறியடித்துள்ளனர்.
மலாக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்த இந்தக் கும்பலைச் சேர்ந்த 22 வயதுடைய நபர், கடந்த சனிக்கிழமை இரவு பண்டார் ஹிலிரில் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.
இக்கும்பலிடமிருந்து 28 ஆயிரத்து 910 மில்லிமீட்டர் போதைப்பொருள் பானம் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.