விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்

புத்ராஜெயா, மார்ச்.03-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மலேசிய கினி நிருபர், B. நந்தக்குமார் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் பிடிபட்ட நந்தகுமார், 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் 16 A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து அந்த நிருபர், செய்தியை வெளியிட்டு இருந்தாலும், அந்த செய்திக்கும், சம்பந்தப்பட்ட நபரின் கைதுக்கும் தொடர்பு இல்லை. இது முழுக்க முழுக்க லஞ்சப்பணம் சம்பந்தப்பட்ட வழக்காகும் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி விளக்கினார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க லஞ்சம் கேட்டு, அந்த நிருபர் வற்புறுத்தியதாக புகார்தாரர் தனது புகாரில் குறிப்பிட்டு இருப்பதையும் அஸாம் பாக்கி சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS