மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு: விரைவில் நிவாரணம் காணப்படும்

புத்ராஜெயா, மார்ச்.03-

அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் பிரச்னைக்கு விரைவில் நிவாரணம் காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள் அதிகரித்து இருப்பது தொடர்பிலும் அவற்றில் பொதிந்திருக்கும் விவகாரங்கள் ஆராயப்படும். மத்திய வங்கியான பேங்க் நெகாரா மற்றும் நிதி அமைச்சுடன் இணைந்த இவ்விவகாரங்கள் கவனிக்கப்படும் என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் உறுதி அளித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள், 40 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு இருப்பது தொடர்பில் காப்புறுதி தொழில்துறை மற்றும் takaful ஆகிய தரப்புகளிடமிருந்து நிறைய கருத்துகள் பெற்றப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS