பெட்டாலிங் ஜெயா, மார்ச்.03-
மருத்துவமனையின் தனியறையில் இளம் பெண் நோயாளியை ஆடைக் களையச் செய்து, வக்கிர செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவரை போலீசார் விசாரணை செய்து வரும் வேளையில் பினாங்கு சுகாதாரத் துறையும் அவரை விசாரணை செய்து வருகிறது.
பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஆபாச சேட்டை தொடர்பில் ஓர் அரசாங்க ஊழியரான 43 வயதுடைய அந்த மருத்துவர் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
பெண் தாதியர் உடன் இல்லாமலேயே 20 மதிக்கத்தக்க பெண்ணை ஆடையைக் களையச் செய்ததாக கூறப்படும் அந்த மருத்துவர் தற்போது சுகாதாரத் துறையின் விசாரணைக்கு ஆளாகியிருப்பதாக பினாங்கு மாநில சுகதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஃபாசிலா சைக் அலாடீன் தெரிவித்துள்ளார்.