கோலாலம்பூர், மார்ச்.03
கடந்தாண்டு 35,368 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இதன் விளைவாக 160 கோடி ரிங்கிட் நிதி இழப்பு ஏற்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் பதிவான 41,701 வணிகக் குற்ற வழக்குகளில் இந்த எண்ணிக்கை, 84.5 விழுக்காட்டை குறிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு 34,495 ஆக இருந்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2024 இல் மூன்று விழுக்காடு அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் பதிவான 120 கோடி வெள்ளி இழப்புடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு காணப்படும் நிதி இழப்பு 29 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது உண்மையிலேயே கவலையளிக்கிறது என்று இன்று கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நடந்த வங்கி ஹீரோஸ் அங்கீகார நிகழ்வில் டத்தோஸ்ரீ ரம்லி இதனைத் தெரிவித்தார்.