நீலாய், மார்ச்.04-
நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் மூன்று ஆடவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சந்தேகப் பேர்வழிகள், நகைக் கடைக்குள் இருக்க, மேலும் ஒருவன், வெளியே காரில் காத்திருந்துள்ளான் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவத்ர சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
நீலாயில் உள்ள பேரங்காடியில் வீற்றிருக்கும் அந்த நகைக்கடையில் துப்பாக்கியேந்திய கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர் என்று பெண் ஒருவரிடமிருந்து ஓர் அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் நகைக்கடைப் பணியாளர்கள் யாரும் காயம் அடையவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.