செர்டாங், மார்ச்.04
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் பாதுகாவலராக வேலை செய்து வந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதுகாவலர் குடியலில் கடமையில் இருந்த 32 வயது பெண் பாதுகாவலரை அந்த ஆடவர் சராமாரியாக தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்றின் வழி, அந்த சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி A.A. அன்பழகன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவரின் காதலை நிராகரித்தற்காக அந்தப் பெண்ணை அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதன் தொடர்பில் 42 வயதுடைய மேகவண்ணன் செல்வராஜு என்று அடையாளம் கூறப்பட்ட நபரை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.