ஷா ஆலாம், மார்ச்.04-
மாது ஒருவரிடம் ஆபாச சைகையைக் காட்டியதுடன், அவரை பின்தொடர்ந்து , பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் இரண்டு நேப்பாளிய ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் புதன்கிழமை ஷா ஆலாம், செக்ஷன் U16, தாமான் புகிட் சுபாங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அன்றயை தினம் மாலை 6 மணியளவில் தாங்கள் போலீஸ் புகார் ஒன்றை பெற்றதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இம்ராஹிம் தெரிவித்தார்.
38 மற்றும் 44 வயதுடைய அந்த இரு நேப்பாளியர்கள் தனது வீட்டின் இரும்புக் கேட்டைத் தட்டி, பாலியல் தொல்லைக் கொடுத்ததால் உதவிக் கோரி தமது உறவினருக்கு தகவல் கொடுத்ததாக அந்த மாது குறிப்பிட்டார்.
எனினும் அந்த இரு அந்நிய ஆடவர்களும் பொது மக்களால் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் இக்பால் குறிப்பிட்டார.
இரு நேப்பாளியர்களையும் பொது மக்கள் வளைத்துப் பிடித்து உட்கார வைத்திருக்கும் காட்சியைக் கொண்ட வீடியோ காணொளி ஒன்று நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.