புத்ராஜெயா, மார்ச்04-
தனது அண்டை வீட்டுக்காரரின் மகளான 13 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக 36 வயது மாது ஒருவருக்கு புத்ராஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இவ்வழக்கில் எதிர்த் தரப்பினர் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட மாதுவிற்கு எதிரான தண்டனையை உறுதி செய்வதாக நீதிபதி டத்தின் எம். குணசுந்தரி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடை ஒன்றில் கேஷயராக வேலை செய்து வந்த அந்த மாது, தமது தண்டனை காலத்தின் போது, அவருக்கு நல்லுரைகள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி குணசுந்தரி உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட மாது, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா பெஸ்தாரியில் உள்ள தனது வீட்டில் அந்த 13 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.