கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது

கோம்பாக், மார்ச்.04-

கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை கோலாலம்பூருடன் இணைக்கும் கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமான TBG, அடுத்த வாரம் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் ஆகக் கடைசியாக நடைபெறும் பரீட்சார்த்த சோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு அந்த பிரதான போக்குவரத்து முனையத்தின் செயலாக்கம் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரிராயாவை முன்னிட்டு கிழக்குக் கரை மாநிலங்களுக்கு செல்கின்றவர்கள் அந்த முனையத்தை பயன்படுத்த முடியும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திலிருந்து கோலாலம்பூருக்கு LRT ரயில் சேவை, கோம்பாக் LRT ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS