மலேசிய கினி நிருபர் நந்தகுமார் ஜாமீனில் விடுவிப்பு

புத்ராஜெயா, மார்ச்.04-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எமால் கைது செய்யப்பட்ட மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஷா ஆலாமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அந்நியத் தொழிலாளர் முகவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நந்தகுமார், இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நந்தகுமாருக்கு விதிக்கப்பட்ட பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் பணத்தை, மலேசிய கினியின் நிர்வாக ஆசிரியர் RK ஆனந்த் செலுத்தினார். உடன் நத்தகுமாரின் மனைவியும் காணப்பட்டார்.

பாகிஸ்தான் ஏஜெண்டுடன் கூட்டாகச் சேர்ந்து அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து மலேசிய கினியில் செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கொடுக்குமாறு அந்த நிருபர், பேரம் பேசியதாகவும், பின்னர் 20 ஆயிரம் வெள்ளியை லஞ்சப் பணமாகப் பெற்றதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்து இருந்தது.

WATCH OUR LATEST NEWS