ஜார்ஜ்டவுன், மார்ச்.05-
வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்த உதவித் தொகை இம்மாதம் 19 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் 7 ஆயிரத்து 66 அரசு ஊழியர்களுக்கு இதன் வழி 78 லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.