கோலாலம்பூர், மார்ச், 05-
ஆபத்து அவசர வேளைகளில் எந்த வழியும் இல்லாமல் போகுமானால் தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஎப். பணத்தை முழுமையாக மீட்டுக் கொள்ள அனுமதிப்பது குறித்து ஈபிஎப். வாரியம் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆலோசனை கூறியுள்ளார்.
எனினும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு முன்னதாகவே ஒரு சந்தாதாரர், தனது ஈபிஎப். பணத்தை முழுமையாக மீட்டுக் கொள்வதற்கு அனுமதிப்பது என்பது ஆகக் கடைசித் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
ஈபிஎப். என்பது தொழிலாளர் ஒருவர், பணி ஓய்வுக்குப் பிறகு தனது அந்திம காலத்தில் பயன்படுத்த வேண்டிய சேமிப்புப் பணமாகும். அதனை முழுமையாக மீட்டுக் கொள்ள அனுமதிப்பது என்பது அவர்களை இறுதி காலத்தில் நிர்கதியாக்கி விடும் என்பதையும் பிரதமர் நினைவுறுத்தினார்.