கோர விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்

ஈப்போ, மார்ச்.05-

பேரா, கோல கூராவ் அருகில் தஞ்சோங் பியாண்டாங், பந்தாய் பத்து செம்பிலானில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.25 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் பெரோடுவா கேலிசா காரில் பயணம் செய்த 59 வயது ஓட்டுநரும், அவரின் 66 வயது மனைவியும் உயிரிழந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Sabarodge Norv Ahmad தெரிவித்தார்.

தம்பதியருடன் காரில் பயணம் செய்த அவர்களின் மகள் என்று நம்பப்படும் 13 வயது பெண் காயங்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பெரோடுவா கேலிசாவும், ஹோண்டா சிட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS