ஜகார்த்தா, மார்ச்.05-
இந்தோனேசியாவில் ஜகார்த்தா, போகோர் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் 120, 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு விநியோகம், அவசர உதவிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பத்து மாவட்டங்களில் 18 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெக்காசி, பண்தேன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ளத் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளும் அவற்றில் அடங்கும்.
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.