குவாந்தான், மார்ச்.05-
குவாந்தானில் மூன்று வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கணவன், மனைவிக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 மற்றும் 31 வயதுடைய அந்த தம்பதியரின் தடுப்புக் காவல் வரும் மார்ச் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி. வான் முகமட் ஸஹாரி வான் பூசு தெரிவித்தார்.
அந்த மூன்று வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.