ஜார்ஜ்டவுன், மார்ச். 05-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், புகிட் ஜம்பூலில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 700 துப்பாக்கித் தோட்டாக்கள், Kaliber 22 ரகத்தைச் சேர்ந்த வெற்றுத் தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டது மூலம் இச்சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்று மதியம், தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் 46 வயது பராமரிப்புப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் இவ்வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட துணை போலீஸ் தலைவர் லீ சுவீ சாக்கே தெரிவித்தார்.
அந்த தோட்டாக்களை அகற்றும் நோக்கில் வீடமைப்புப் பகுதியின் குப்பைக் கூளத்தில் அவற்றை வீசியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஒரு வீட்டில் பராமரிப்புப் பணிகளில் தாம் ஈடுபட்டிருந்த வேளையில் அந்த துப்பாக்கித் தோட்டாக்களைக் கண்டெடுத்ததாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார் என்று லீ சுவீ சாக்கே குறிப்பிட்டுள்ளார்.