கோலாலம்பூர், மார்ச்.05-
இவ்வாண்டு 31 ஆம் தேதி வரை, மக்களின் பணம், 12.7 பில்லியன் அல்லது 1,270 கோடி ரிங்கிட், இன்னமும் கோரப்படாமல் கிடப்பில் உள்ளதாக மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா பதிவு செய்துள்ளது.
தங்களுக்குச் சேர வேண்டிய பணம் அல்லது அந்தப் பணத்தைக் கோருவதற்கு உரிமைப் பெற்ற வாரிசுதாரர்கள், நிதி அமைச்சின் கருவூலத்திலிருந்து பணத்தை கோருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்பணத்தை கோருவதற்கு அவர்கள் ஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அதிகாரப்பூர்வ eGUMIS அகப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா தெரிவித்துள்ளது.
ஓன் லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மலேசிய தேசிய கணக்காய்வு இலாகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் இன்று சங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவனின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.