ஜோகூர் பாரு, மார்ச்.05-
ஜோகூர் பாரு, ஜாலான் ஆவுஸ்துன் ஹாய்ட்ஸ் ,முன்புறத்தில் கலவரத்தில் ஈடுபட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 14 ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கலவரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 19 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் இன்று புதன்கிழமை அதிகாலையில் பிடிபட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தனது காரில் இருந்த 20 வயது உள்ளூர் ஆடவர், இந்த கும்பலினால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டடதாக ரவூப் செலமாட் குறிப்பிட்டார்.