முக்கியச் சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டார்

கோலாலம்பூர், மார்ச்.05-

நிறுவனம் ஒன்றில் 24 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள அந்நிய நாணய முதலீட்டில், இழப்பு ஏற்பட்டதற்கு மோசடி செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் முக்கியச் சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த பிரதான சந்தேகப் பேர்வழியை கைது செய்வதற்கு ஏதுவாக தற்போது விசாரணை அறிக்கை முறைப்படுத்தப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் இயக்குநர் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் நிகழ்ந்த இந்த முதலீட்டு மோசடிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஐவர், கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS