ஜார்ஜ்டவுன், மார்ச்.05-
பினாங்கு மாநிலத்தில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலையில் ஸ்பைஸ் அரேனா அரங்கில் 17 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதளிப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும், மலேசிய ரசிகர்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்விற்கு 50க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு விருது மற்றும் கலை நிகழ்வுகளை படைக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் கனடா, ஆஸ்திரேலியா, மலேசிய இந்திய கலைஞர்களும், கலை நிகழ்வு நடத்த உள்ளனர். இம்மாபெரும் விழாவிற்கு பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் துவக்கி வைக்கவும், பினாங்கு மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வோங் ஹொன் வாயும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்விற்கு துவக்கி வைக்க இசைவு தெரிவித்ததற்கு எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் இணைந்து முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க Myticket Asia என்ற இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு +601661677 08.