கோலாலம்பூர், மார்ச்.05-
புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சின் கருவூல இலாகாவின் அலுவலகத்தில் அதன் அதிகாரி ஒருவர் இன்று காலையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
45 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி தனது அலுவலக அறையின் தரையில் படுத்த வாக்கில் இறந்து கிடந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
காலை 10.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.