கோலாலம்பூர், மார்ச்.05-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்துள்ளது.
அவை முறையே லிட்டருக்கு 3 ரிங்கிட் 30 காசுக்கும், 3 ரிங்கிட் 13 காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசுக்கு தொடர்ந்து விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.