அமெரிக்கவுடனான உறவில் மலேசியா கவனமாக இருக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.05-

அமெரிக்காவுடனான உறவில் மலேசியா மிக கவமான இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

அண்மையில் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் உக்ரெயின் அதிபர் Volodymyr Zelensky – யை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்த விதம், உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் ராஜதந்திர உறவில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

உபசரணையாளர் என்ற முறையில் அமெரிக்காவினால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட ஒருவர், தனது குழுவினருடன் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது, ராஜதந்திர வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்று துன் மகாதீர் வர்ணித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடந்த விவாதம், காரசாரமாக மாறியது கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.

இது அமெரிக்காவின் ராஜதந்திர உறவில் உள்ள குறைபாடுகளாகும். இதில் மலேசியா மிக கவனமாக இருக்க வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS