நந்தகுமார் சம்பந்தப்பட்ட வழக்கு – 6 பேரிடம் விசாரணை

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.05-

அந்நியத் தொழிலாளர் சம்பந்தப்பட்ட ஏஜெண்டு ஒருவரிடம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார் கைது நடவடிக்கை தொடர்பில் ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு பேரை தவிர, மேலும் இருவரை விசாரணை செய்வதற்கு எஸ்பிஆர்எம் விரைவில் அழைப்பாணை அனுப்பும் என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏஜெண்டு ஒருவரிடம் 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சப் பணம் வாங்கும் போது நந்தகுமார் கையும் களவுமாக பிடிபட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS