நீலாய், மார்ச்.06-
சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இத்துயரச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நீலாய், தாமான் செமாராக் சாலையில் நிகழ்ந்தது.
இதில் ஹொண்டா RS ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சமையல்காரரான 35 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.
இரண்டு வாகனங்களும் நீலாயிலிருந்து மந்தினை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக அவர் குறிப்பிட்டார்.