கோலாலம்பூர், மார்ச்.06-
மாணவர்கள் பள்ளியில் வேப் மின்சிகரெட்டுகளைப் புகைப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.
பள்ளிகளில் வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சு கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் முதல் கட்ட நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரை இரண்டு வார காலம் இடை நீக்கம் செய்வதாகும் என்று ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.
மாணவர்களிடையே வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பெற்றோர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.