எம்சிஎம்சி விசாரணைக்கு ஏரா எப்ஃஎம் வானொலி ஒத்துழைக்கும்

கோலாலம்பூர், மார்ச்.06-

காவடி ஆட்டத்தைக் கொச்சைப்படுத்தி, இந்துக்களை அவமதித்து , காணொளியொன்று வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பில் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி மேற்கொண்டு வரும் புலன் விசாரணைக்கு, ஏரா எப்ஃஎம் வானொலி முழு ஒத்துழைப்பை நல்கும் என்று அந்த வானொலியின் தாய் நிறுவனமான ஆஸ்ட்ரோ ரேடியோ சென். பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்சிஎம்சி ஆணையம் தங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு ஏற்ப, தேவையான தகவல்களை வழங்குவதில் ஏரா எப்ஃஎம் வானொலி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று ஆஸ்ட்ரோ ரேடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்துக்களை அவமதித்து காணொளி வெளியிட்டதற்காக அந்த தனியார் வானொலி நிறுவனத்தின் உரிமைத்தை ஏன் இடை நீக்கம் செய்யக்கூடாது என்று காரணம் கேட்டு, அஸ்ட்ரோ வானொலி நிறுவனத்திற்கு எம்சிஎம்சி நேற்று கடிதம் அனுப்பியுள்ளது.

அடுத்த 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் தவறுமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் எம்சிஎம்சி நினைவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS