மலாக்காவில் 30 இடங்கள் வெள்ளக் காடாக மாறின

மலாக்கா, மார்ச்.06-

இன்று காலையில் பெய்த கனத்த மழையில் மலாக்காவில் மூன்று மாவட்டங்களில் 30 க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளக் காடாக மாறின.

காலையில் சுமார் மூன்று மணி நேரம் கொட்டித் தீர்த்த இந்த அடை மழையில் பல வீடுகளில் வெள்ளத்தின் மட்டம், முழங்கால் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களை நிவாரணை மையங்களுக்குக் கொண்டுச் செல்லவும் மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் வெள்ள நடவடிக்கை அறை, மதியம் 12.30 மணியளவில் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வாக செயலகம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS