கோலாலம்பூர், மார்ச்.06-
சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த ஏர் ஆசியாவின் உள்ளூர் விமானச் சேவைகள் அனைத்தும், வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு மாற்றப்படுவதாக அந்த சிக்கன கட்டண விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
உள்ளூர் விமானச் சேவைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஏர் ஆசியா இம்முடிவை எடுத்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அனைத்து உள்ளூர் சேவைகளும் கேஎல்ஐஏவின் இரண்டாவது முனையத்திற்கு மாற்றப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.