பெட்டாலிங் ஜெயா, மார்ச்.06-
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் உயர் மட்டப் பதவிகளுக்கு போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் முன்னாள் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ரபிஸி ரம்லியிடம் தோல்விக் கண்டவரான சைபுடின், உயர் மட்டப் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தால் அதனை செய்தியாளர்கள் கூட்டத்தின் மூலம் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.