யாராக இருந்தாலும் விசாரணை செய்யப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.06-

இன மற்றும் மதம் தொடர்புடைய உணர்ச்சிகரமான விவகாரங்களுக்குத் தூபம் போட்டு, தூண்டிவிடும் அதே வேளையில் மதங்களை அவமதிக்கும் யாராக இருந்தாலும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதம் மற்றும் இனத்தைக் கேலி செய்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இரட்டை நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இனம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தமது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS