மியன்மார் பிரஜை கொடூரமாக வெட்டிக் கொலை

தாசேக் குளுகோர், மார்ச்.07-

வெட்டுக்கத்தியை ஆயுதமாக ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று மியன்மார் பிரஜை ஒருவரைக் கொடூரமாக வெட்டிக் கொன்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செபாடு ஜெயாவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் நிகழ்ந்தது.

தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்களுக்கு ஆளான 38 வயதுடைய மியன்மார் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டார்.

நாசி கண்டார் உணவகத்தின் நிர்வாகியான அந்த மியன்மார் பிரஜையிடம் ஏதோ விசாரிப்பது போல் பாவனை செய்த நிலையில், அந்த கும்பல் திடீரென இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

முகமூடி கும்பலில் பிடியில் சிக்கிய அந்த மியன்மார் பிரஜை கடும் வெட்டுக் காயங்களுடன் உணவகத்தை விட்டு தப்பி ஓட முயற்சித்த போது, மயங்கி விழுந்து மாண்டதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS