கோலாலம்பூர், மார்ச்.07-
இஸ்லாத்தைக் கொச்சை வார்த்தைகளால் திட்டி, அவமதித்து, ஒரு காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள விஜயன் சவரிமுத்து என்ற பெயர் கொண்ட முகநூல் கணக்கு வைத்திருப்பவர், வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று ரஸாருடின் குறிப்பிட்டார்.
எனினும் அந்த நபர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து போலீசார் துல்லியமாக கண்காணித்து வருவதாக ஐஜிபி தெரிவித்தார்.
இஸ்லாத்தை அவமதித்த அந்த நபர் , பொது மக்களின் கடும் கண்டனத்திற்கு ஆனானதைத் தொடர்ந்து அந்த காணொளி அகற்றப்பட்டு விட்டதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.