பாசீர் கூடாங், மார்ச்.08
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் 43 பயணிளும், பேருந்து ஓட்டுநரும் பீதியில் மூழ்கினர்.
விபத்து நடந்த முறையைக் கண்டு, பயணிகள் பயத்தில் உறைந்தனர் என்று தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று இரவு 8.40 மணியளவில் ஜோகூர், ஜாலான் பாசீர் கூடாங் சாலையில் நிகழ்ந்தது. ஐந்தே நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டனர் என்று பாசீர் கூடாங் தீயணைப்பு நிலைய ஒருங்கிணைப்பாளர் ஹாய்ஸ்ருல் ரஹ்மாட் தெரிவித்தார்.
இவ்விபத்தில்ர ஹீனோ ரக பேருந்தும், டொயோட்டா Hiace வேனும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.