கட்டடத்தின் முதல் மாடி இடிந்து விழுந்ததில் சீனப் பிரஜை படுகாயம்

கோத்தா கினபாலு, மார்ச்.08-

சபா, கோத்தா கினபாலுவில் உள்ள நான்கு மாடிகளை கொண்ட செகாமா காம்ப்ளெக்ஸ் வர்த்தகம் கட்டடத்தின் முன்புற முதலாவது மாடி இடிந்து விழுந்ததில் ஒரு சீனப் பிரஜையான 55 வயது மாது படுகாயத்திற்கு ஆ ளாகினார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இடிந்து விழுந்த கட்டடத்தின் சிதறல்கள் பட்டதில் அந்த மாது காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதுவும், அவரது கணவரும் அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அந்த கட்டடம் கடந்த 70 ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS